தவிசாளர் முஜாஹிரினால் தெருவிளக்கு பொருத்தும் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிரின் மூலம் தலைமன்னார் ஸ்டேஷன் பகுதிக்கு தெருவிளக்குகள் பொருத்தும் பணிகள் நேற்று (12) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

பிரதேச சபை உறுப்பினர் புனிதா அவர்களின் வேண்டுகோளுக்கமைய, தவிசாளர் முஜாஹிரின் முயற்சியில், LED தெருவிளக்குகள் பொருத்தும் பணிகள்  இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் புனிதா மற்றும் கட்சியின் முக்கியஸ்தர் முஸம்மில் உட்பட கிராம மக்களும் கலந்துகொண்டனர்.

(ஐ)