திட்ட அமுலாக்கம் தொடர்பிலான கலந்துரையாடல்! 

கிண்ணியா பிரதேச சபையின் முனைச்சேனை வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபின் 100 நாள் 200 வேலைத்திட்டத்தில், 30 மில்லியன் ரூபா நிதியில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (24) இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிண்ணியா பிரதேச சபை உறுப்பினரும், முனைச்சேனை வட்டார அமைப்பாளருமான அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப், கிண்ணியா நகரசபை உறுப்பினர்களான ஹாரிஸ், மஹ்தி, நிசார்டீன் மற்றும் கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பைரூஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

(ன)