நாகவில்லு பிரதேச முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்!

புத்தளம் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ரிஜாஜின் ஏற்பாட்டில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியாவின் தலைமையில், நாகவில்லு பிரதேச மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் நேற்று (07) இடம்பெற்றது.

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஆராயப்பட்ட இந்தக் கலந்துரையாடலில், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ரிபாஸ், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான ஆஷிக், பைசர் மரிக்கார் ஆகியோர் கலந்துகொண்டனர்.