பல வருடங்களாக போக்குவரத்துக்கு தடையாகயிருந்த பாதை பி.உ.சஹீலின் முயற்சியால் புதுப்பொலிவு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஓதுக்கீட்டில், சம்மாந்துறை பிரதேச சபையின் வீரமுனை வட்டார உறுப்பினர் ஏ.சி.எம்.சஹீலின் முயற்சியினால், பல வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்றுக் கிடந்த சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட, உடங்கா 01, அம்பாறை 12 ஆம் வீதியின், குறுக்கு வீதியின் புனரமைப்பு மற்றும் பாலத்திற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.