பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் நிதி ஒதுக்கீட்டில் நொச்சியாகம கந்துவெவ கிராம மக்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நொச்சியாகம கந்துவெவ கிராம மக்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த இயந்திரம் 2019.02.10 அன்று பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் வைபக ரீதியாக மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வின்போது மேல்மாடி கட்டுமான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கந்துவெவ முஸ்லிம் பள்ளிவாயலினையும் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் பார்வையிட்டதோடு கட்டிட அபிவிருத்திக்கும் ஓர் தொகை நிதியினை ஒதுக்கீடு செய்து பள்ளி கட்டிட வேலைகளை முடித்துத்தருவதாவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்…..