பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்-கனடா உயர்ஸ்தானிகர் இடையிலான சந்திப்பு!

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் மற்றும் கனடாவின் உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னின் ஆகியோருக்கிடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு இன்று (14) அம்பாறை மொன்டி ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில், மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுத் தலைவரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்சில் மற்றும் கட்சியின் முக்கியஸ்தரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கலாநிதி ஏ.எல்.ஏ.கபூர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.