பாராளுமன்ற பொதுத் தேர்தல் – 2020 – வேட்பாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்…!

பாராளுமன்றப் பொதுத் தேர்தல் – 2020

வேட்பாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்…!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC)

எதிர்வரும் 2020 – ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, “ஐக்கிய மக்கள் சக்தி” கூட்டமைப்புடன் கூட்டுச்சேர்ந்து, நாடுதழுவிய ரீதியில் வேட்பாளர்களை நியமிக்கவுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட எதிர்பார்க்கும் ஆர்வமுள்ள வேட்பாளர்கள், தாங்கள் போட்டியிட விரும்பும் மாவட்டத்தைக் குறிப்பிட்டு, தங்களது பூரண சுயவிபரக் கோவையுடன் தங்களது முன்னைய அரசியல் அனுபவங்களையும் குறிப்பிட்டு, உடனடியாக கீழ்வரும் முகவரியுடன் தொடர்புகொள்ளவும்.

S.சுபைர்தீன்,
செயலாளர் நாயகம்,
23/4, சாலமன் றோட்,
கொழும்பு – 06.