பாவற்குளத்தில் பாலர் பாடசாலை கட்டிடத் திறப்பு விழா!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், வவுனியா, பாவற்குளம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாலர் பாடசாலை கட்டிடத் திறப்பு விழா இன்று காலை (18) இடம்பெற்றது.
 
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மக்கள் காங்கிரஸ் தலைவர்  ரிஷாட் பதியுதீன் கலந்து சிறப்பித்ததுடன், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பிலும் பங்கேற்றிருந்தார்.