புத்தளம் நகருக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ வீ. இராதகிருஸ்ணன் விஜயம்..

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் அழைப்பின் பேரில் நேற்று (2017-05-16) செவ்வாய்க்கிழமை இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ வீ. இராதகிருஸ்ணன் அவர்கள் புத்தளம் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்..
இதன் முக்கிய நிகழ்வாக புத்தளம் நகருக்கான கல்வி இராஜாங்க அமைச்சர் அவர்களின் விஜயம் அமைந்திருந்தது..

இங்கு…
புத்தளம் ஜனதிபதி விஞ்ஞான கல்லூரிக்கான மூன்று மாடிகளை கொண்ட அலுவலக கட்டிடம் ஒன்றை கட்டுவதற்க்கான அடிக்கல்நாட்டு வைபவம் நடைபெற்றது..
இக்கட்டிடமானது புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் பாரிய முயற்சியின் பயனாகவும், அவர்களின் வேண்டுகோளின் வாயிலாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ வீ. இராதகிருஸ்ணன் அவர்கள் மூலம் புத்தளம் ஜனதிபதி விஞ்ஞான கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது விஷேட அம்சமாகும்..

மேலும் இங்கு கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ வீ. இராதகிருஸ்ணன் அவர்கள் பேசும் போது இன்னும் மூன்று வருட காலப்பகுதிற்க்குள் இப்பாடசாலையின் அனைத்து கட்டிட நிர்மாண வேலைகளும் பூர்த்திசெய்யப்பட்டு இப்பாடசாலை திறம்பட இயங்குவதுக்கு தன்னாலான முழு முயற்சியையும் செய்வதாக உறுதியளித்தார்..
அதனைத்தொடர்ந்து புத்தளம் பாத்திமா மகளீர் கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு வைபவத்திலும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி, மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ வீ. இராதகிருஸ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்..

இங்கு பாடசாலை அதிபரினால் தமக்கான பொது விழா மண்டப கட்டிடம் (Auditorium) ஒன்றிற்கான வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.. இதற்க்கு பதிலளித்த கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ வீ. இராதகிருஸ்ணன் அவர்கள் எதிர்வரும் இரண்டு வருட காலப்பகுதிக்குள் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் ஊடாக புதிய பொது விழா மண்டப கட்டிடம் (Auditorium) ஒன்றை வழங்குவதற்க்கு முழுமுயற்சி செய்வதாகவும் வாக்களித்தார்..