புத்தளம் மாவட்டத்தில் கிராமசேவ உத்தியோகத்தர் காரியாலங்களை அமைக்கும் செயற்திட்டத்தின் ஆரம்பித்துவைத்தை நவவி எம்.பி

அரச வேலைத்திட்டங்களின் ஒரு பகுதியாக பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் முயற்சியினால் புத்தளம் மாவட்டத்தில் பல கிராமசேவ உத்தியோக காரியாலங்களை அமைக்கும் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று முசல்பிட்டி கிராமத்தில் கிராமசேவ உத்தியோக காரியாலய கட்டிடத்திட்கான அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் கலந்துகொண்டதோடு, புத்தளம் ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் நஸ்மி மற்றும் வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.