புலமைப்பரிசில் பரீட்சையில் சிந்தியைடந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு!

“அமீர் அலி பவுண்டேஷனின்” ஏற்பாட்டில் 2019ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சிந்தியைடந்த மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை கெளரவிக்கும் நிகழ்வும், பொது தொடர்பாடல் சேவையில் சேவையாற்றிய கலீல் அவர்களுக்கு சிஹாப்தீன் மெளலவி விருது வழங்கும் நிகழ்வும் மீராவோடை, அல் ஹிதாயா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

பிரதித் தலைவர் வைத்தியர் அப்தாப் அலி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், மக்கள் காங்கிரஸ் தவிசாளர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், பிரதேச சபை தவிசாளர் அஸ்மி, ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் காதர், ஓய்வு பெற்ற அதிபர் முஹம்மட், பிரதேச சபை உறுப்பினர்களான நெளபர், ஜெஸ்மின், நபீரா, உதவித் திட்டப் பணிப்பாளர் றுவைத், உதவிக் கல்விப் பணிப்பாளர் ஜாபீர் கரீம், முன்னாள் தவிசாளர் ஹமீட் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துசிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் போது, கல்வி அபிவிருத்தியில் மீரா ஜூம்ஆ பள்ளிவாசல் மேற்கொண்டு வரும் சேவையினைப் பாராட்டி, ஞாபக சின்னம் வழங்கி கொளரவிக்கப்பட்டது.