பொத்துவில் ஐ.தே.க முக்கியஸ்தர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

பொத்துவில் பிரதேச ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொண்டனர்.

பொத்துவில் ஐ.தே.க அமைப்பாளர் யு.எல்.எம். நியாஸ் தலைமையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 2018 இல் போட்டியிட்ட ராபி, முகைதீன் பாவா, தாஜூதீன், கோமாரி ஐ.தே.க அமைப்பாளரும், வேட்பாளருமான ராஜீ, அரபா சமூக சேவை அமைப்பின் தலைவர் தஸ்லீம் மற்றும் அஸ்மி, தொர ஆகியோர், கட்சித் தலைவர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டதுடன், கட்சியின் உறுப்புரிமையையும் பெற்றுக்கொண்டனர்.

கொழும்பில் நேற்று முன்தினம் இரவு (10) இடம்பெற்ற இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் சட்டத்தரணி முஷாரப் உட்பட முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.