மக்கள் காங்கிரஸ் மகளிர் விவகாரங்களுக்கான அமைப்பாளர் நியமனம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் பணிப்புரைக்கமைய, கட்சியின் மகளிர் விவகாரங்களுக்கான அமைப்பாளராக ஜான்ஸிராணி சலீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் காங்கிரஸ் செயலாளர் எஸ். சுபைர்தீன் அவர்களால், அவருக்கான நியமனக் கடிதம் இன்று (08) வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.