மதீனா வித்தியாலயத்தின் 2வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

கேணிநகர் மதீனா வித்தியாலயத்தின் 2வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 11.02.2020 திங்கட்கிழமை அதிபர் மீராமுகைதீன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வுக்கு பிரதி கல்விப் பணிப்பாளர் அஜ்மீர் , கோட்டக் கல்விப் பணிப்பாளர் அஹ்சாப், உதவி கல்விப் பணிப்பாளர்களான கலீல்றகுமான், இஸ்மாயில், ஜாபீர் கரீம், ஆசிரியர் ஆலோசகர் சித்தீக், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் , அதிபர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.