மன்னாரில் பட்டதாரி பயிலுனர் 215பேருக்கு நிரந்தர நியமணம் அமைச்சர் றிசாத் பதியுதீன் வழங்கி வைத்தார்

(பெர்னாண்டோ ஜோசப்)
மன்னார் மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களாக கடமையாற்றியவர்களுக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருக்கின்றது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களில் பயிலுணர்களாக கடமையாற்றிவந்த சுமார் 215 பேருக்கு குறித்த நியமணங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, உயர்கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, விவசாயம், நீர்ப்பாசணம், காணி உள்ளிட்ட சுமார் பத்திற்கும் மேற்பட்ட அமைச்சின் கீழ் இந்நியமணங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது.
மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெயிக்கா மண்டபத்தின் கேட்போர் கூடத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலமை உரையினை நிகழ்த்தி நிகழ்வை ஆரம்பித்து வைத்திருக்கின்றார்.
மன்னாரில் இடம்பெற்ற பட்டதாரி பயிலுனர்களுக்கான நிரந்தர நியமணம் வழங்கும் நிகழ்வில் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் றிஸாட் பதியுதீன் சிறப்பதிதியாக கலந்து கொண்டு குறித்த நியமனக்கடிதங்களை வழங்கி வைத்திருக்கின்றார்.
இதில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மெல், உதவி மாவட்டச் செயலாளர் எஸ். பரமதாஸ், மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம் . எம் . சியான், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், மன்னார் நகர சபை உறுப்பினர் என். நகுசீன், பிரதேசச் செயலாளர்கள் உள்ளடங்களாக பல அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பயிலுணர்களாக இருந்து நிரந்தர நியமணத்தை பெற்றுக்கொண்டவர்கள் அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு நன்றியை தெரிவித்தனர்