மன்னார், கருங்கண்டல் பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், மன்னார், மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட, கருங்கண்டல் ரோமன் கத்தோலிக்க தமிழ் மகாவித்தியாலயத்தில் சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (13) இடம்பெற்றது.

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீனின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், மாந்தை பிரதேச சபை தவிசாளர் செல்லத்தம்பு ஐயா, மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி பிராந்திய பணிப்பாளர் முனவ்வர், மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீப் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

அத்துடன், யுத்த காலத்தில் கருங்கண்டல் மக்களின் விவசாயக் காணிகளில் விடுதலைப்புலிகளினால் அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழிகளை (பங்கர்) துப்புரவு செய்து, மண் நிரப்பும் வேலைத்திட்டமும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

(ன)