மன்முனை தென் எறுவில் பற்று பிரதேச செயலக பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமீர் அலி தலைமையில்

மன்முனை தென் எறுவில் பற்று பிரதேச செயலக பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (11) பிரதேச செயலக செயலாளர்  ரங்கநாதன் அவர்களின் இறைவனக்கத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீநேசன், வியாழேந்திரன் , கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான துரைரெட்ணம், கிருஷ்ணப்பிள்ளை , கருணாகரன், பிரசன்னா, மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.