மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கி வைப்பு!

கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட கிராம மக்களுக்கான நிவாரணப்பொருட்கள் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் வழங்கி வைக்கப்பட்டது.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்தநிலையில் அவர்களுக்கான விரைவான ஒரு செயற்திட்டமாக கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவுச்சங்க அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியோக செயலாளரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்களின் தலைமையில் வெள்ள நிவாரணம் இன்று (2018.12.29) வழங்கிவைக்கப்பட்டது.

இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நந்தன், மன்னர் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் மாந்தை மேற்கு பிரதேசசபை தவிசாளர் செல்லத்தம்பு மற்றும் மன்னார், நானாட்டான், மாந்தை,பிரதேச சபை உறுப்பினர்களும் மன்னார் நகர சபை உறுப்பினர் நகுசீன் அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.