மீராவோடை மேற்கு வட்டாரக் குழு தலைவர் றிஸ்வின் தலைமையில் மகளிர்களுக்கான கருத்தரங்கு.

மீராவோடை மேற்கு வட்டாரக் குழு தலைவர் றிஸ்வின் தலைமையில்  நேற்று  (13) மகளிர்களுக்கான கருத்தரங்கு இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்நிகழ்வில் முன்னாள் தவிசாளர் ஹமீட், பிரதேச சபை உறுப்பினர்களான ஜெஸ்மின், ஜெமிலா, நபீரா , முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பாயிஷா, மத்திய குழு செயலாளர் அக்பர் ,  மக்கள் சக்தி தலைவர் றபீக், மக்கள் சக்தி தலைவர் பெளஷான், வட்டாரக் குழு உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.