மீள்குடியேற்ற துரித செயலணி இணைத்தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  நிதி ஒதுக்கீட்டில் வீடுகள் 

அ.இ.ம.கா தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் மீள்குடியேற்ற  துரித செயலணியின் இணைத்தலைவருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியால் மீள்குடியேற்ற துரித செயலனியூடாக மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்திற்கான  சுமார் 104 வீடுகள் கட்டுவதற்கான. அடிக்கல் நாட்டு விழா நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு  கிராம மக்களின் வேண்டுகோளின் பேரில் பிரதம விருந்தினராக வடமாகான சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான   றிப்கான் பதியுதீன் அவர்களும் மீள்குடியேற்ற செயலனி மன்னார் மாவட்ட இனைப்பாளர் முஜீப் அவர்களும் பள்ளி நிருவாகம் கிராம மக்கள் ஆகியோரும் இந் நிகழ்வில்  கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.