முத்துநகரில் விவசாயிகளின் ஏர்பூட்டு விழா பெரும்போகம் 2019/2020 அங்குரார்ப்பண நிகழ்வு!

திருகோணமலை உப்புவெளி கமநல சேவைகள் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் தகரவெட்டுவான்,முத்துநகர் ஆகிய இரு விவசாய சம்மேளனங்களும் இணைந்து ஏற்பாடு செய்த 2019/2020 ஆண்டுக்கான ஏர்பூட்டு விழா முத்து நகர் விவசாய முன்றலில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வானது இன்று (24) காலை விவசாய சம்மேளனங்களின் பங்கேற்புடன் இடம் பெற்ற இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்கள் கலந்து கொண்டு விவசாய சமூகத்துடன் இணைந்து வயல் விதைப்பதற்கான ஆரம்ப நிகழ்வுகளை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இதன் போது மழை வேண்டியும் நல்லதொரு விளைச்சல் கிடைக்க வேண்டுமென்பதில் மத அனுஷ்டானங்களும் மௌலவிமார்களால் அங்கு வேண்டப்பட்டது
குறித்த நிகழ்வில் கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எஸ்.புனித குமார், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.கைசர் மற்றும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் கே.உதயராஜ் விவசாய போதனாசிரியர்கள் , விவசாய சம்மேளனத்தின் உறுப்பினர்கள்,விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டார்கள்.