முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், சவரான பாடசாலை அபிவிருத்திப் பணிகள் திறந்து வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், சிலாபம், சவரான முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானம், பெவிலியன் மற்றும் நுழைவாயில் ஆகியவற்றை, மாணவர்களின் பாவனைக்காகத் திறந்துவைக்கும் நிகழ்வு நேற்று (12) இடம்பெற்றது.

புத்தளம் நகரசபை உறுப்பினரும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான அலி சப்ரி ரஹீமின் முயற்சியில், சவரான கட்சிக் கிளையின் வேண்டுகோளின் பேரில், சுமார் 60 இலட்சம் ரூபா பெறுமதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த  அபிவிருத்திப் பணிகளை திறந்துவைக்கும்  நிகழ்வில், பிரதம அதிதியாக அலி சப்ரி ரஹீம் கலந்துகொண்டதுடன், கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் அதிபர், ஆசிரியர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.