முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர், மக்கள் காங்கிரஸின் திருமலை தொகுதி அமைப்பாளராக நியமனம்!

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பிரதி அமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்றூபினால் இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை, நகர சபை உறுப்பினர் மஹ்தி மூதூர் தொகுதிக்கான பிரச்சார செயலாளராகவும், முன்னாள் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் சல்மான் பாரிஸ் குச்சவெளிக்கான மத்திய குழுத் தலைவராகவும், குறிஞ்சாக்கேணி பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி கிண்ணியா பிரதேச சபையின் பிரச்சார செயலாளராகவும் நியமனம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.