முல்லைத்தீவு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில்   துணுக்காய், மாந்தை கிழக்கு, ஓட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகங்களுக்குட்பட்ட கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 1500 குடும்பங்களுக்கான நிவாரணப் பொதிகள், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.