எம்.எம்.ஜுணைட் நேர்மையான சிந்தனையுடையவர் – அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அனுதாபச் செய்தி

(அமைச்சரின் ஊடகப்பிரிவு)
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்  உதவிப்பணிப்பாளராக நீண்டகாலம் பணிபுரிந்த சகோதரர் எம்.எம்.ஜுணைட் நேர்மையான சிந்தனையுடையவர் என அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்தார்.

இன்று காலை இவரின் வபாத் செய்தியை நான் அறிந்து கொண்ட போது மிகவும் கவலையடைந்தேன். நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரியாக கடமைபுரிந்ததுடன்  என்னுடன் நெருக்மானவராகவும் செயற்பட்டார்.

பல புதிய விடங்களைப் பற்றி சிந்திப்பவராகவும்  எச் சந்தர்ப்பத்திலும் நேர்மையை கடைப்பிடிப்பவராகவும் திகழ்ந்தார்.

வடகிழக்கில் மீள் குடியேற்ற நடடிவடிக்கையின் போது தமிழ் முஸ்லிம் என்ற வேறுபாடின்றி அனைவரையும் ஒன்றாக கருதி செயற்பட்டார். வக்பு துறையில் பேதியளவு அறிவு கொண்டிருந்ததுடன் பள்ளிவாயல்களில் தோன்றும் முரண்பாடுகள் மற்றும் பள்ளிவாயல்களின் சுமுகமான இயக்கத்திற்கு வழி வகுத்தவர்.

இவரின் மரணம் சமுகத்தின் முன்னேற்றத்திற்கு இழப்பாகவுள்ளது. இவர் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் செல்ல நாம் பிரார்த்திப்பதோடு இவரின் பிரிவை தாங்கிக் கொள்ளும் மனபலத்தை இவரின் குடும்பத்திற்கு அல்லாஹூத்தஆலா கொடுக்க வேண்டும் என தனது அனுதாபச் செய்தியில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்