மு.கா பிரதேச சபை உறுப்பினர் ஹனீபா GS, மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலிக்கு ஆதரவு..!

மட்டக்களப்பு மாவட்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை ஆதரித்து, ஓட்டமாவடியில் (04) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான ஹனீபா GS, அமீர் அலியின் வெற்றிக்கு ஆதரவு வழங்கும் முகமாக, சஜித் பிரேமதாஸவின் மேடையில் கைகோர்த்தார்.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும், விஷேட அதிதியாக தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் அஷாத் சாலியும் பங்கேற்றிருந்தனர்.

மேலும், தவிசாளர் அமிஸ்டீன், வேட்பாளர்களான ஜோன் பாஸ்டர், மகேந்திரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான நௌபர், அமீர், றஹீம் ஆசிரியர் உட்பட பிரமுகர்களும் ஆதரவாளர்கள் பலரும் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.