மேலதிக அரசாங்க அதிபர் லத்தீப் அவர்களுக்கு நிந்தவூர் மக்கள் சார்பாக தவிசாளர் தாஹிர் பாராட்டு.

நிந்தவூர் பிரதேச செயலக பிரிவின் செயலாளராக இருந்து அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் சட்டத்தரணி ஏ.எம் அப்துல் லதீப் அவர்களுக்கு நிந்தவூர் மக்கள் சார்பாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்களால் பொன்னாடை போர்த்தி நினைவுசின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை(12) நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நிந்தவூர் பிரதேச செயலாளர் ரீ.எம்.எம் அன்ஷார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது

இதன் போதே தவிசாளர் அவர்களால் மேலதிக அரசாங்க அதிபர் கெளரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களும், கௌரவ அதிதியாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்களும், அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள் ஏ.அஸ்பர்,எம.எல்.ஏ.மஜீத், எம்.எம்.சம்சுதீன், பஸீரா உம்மா,கே.எம் ஜெஸீம் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.