யாழ் ஒஸ்மானியா மைதானத்தில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்ட கால அகதிகளின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் விசேட நிதியொதுக்கீட்டில், இருபது இலட்சம் ரூபா செலவில் யாழ் / ஒஸ்மானியா மைதானத்தில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கான வேலைத்திட்டம் நடைபெறுகின்றது.

மேற்படி வேலைத்திட்டங்களை இன்று (01)அகில இலங்கை மக்கள் காங்கிரசின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம்.நியாஸ் நிலாம் மற்றும் அமைச்சரின் செயற்திட்ட இணைப்பாளர் முஜாஹித் நிசார் ஆகியோர் பார்வையிட்டனர்.