“ரிஷாட் பதியுதீன்” கால்பந்தாட்டச் சுற்றின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும்!

மருதமுனை யுனிவர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையோடு, அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் 2019 நடாத்தி வந்த “ரிஷாட் பதியுதீன் கால்பந்தாட்டச் சுற்றின்” இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும், மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டரங்கில், இன்று மாலை (19) நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, வெற்றிக் கிண்ணத்தையும், பரிசில்களையும் வழங்கிவைத்தார்.
 
இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள், கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள்  எனப் பலரும் கலந்துகொண்டனர்.