ரிஷாட் பதியுதீன் கிரிக்கட் கிண்ண சுற்றின் பரிசளிப்பு விழா!

புத்தளம், வேப்பங்குளம் 04 ஆம் கட்டையில் இடம்பெற்ற, ரிஷாட் பதியுதீன் கிரிக்கட் கிண்ண சுற்றின் இறுதிப் போட்டிப் பரிசளிப்பு விழாவில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அந்-நூர் விளையாட்டுக் கழகத்துக்கு வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்தார்.

தௌபீக் மதனியின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதி அமைச்சர் அமீர் அலி, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன், புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் ஆகியோர் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

-ஊடகப்பிரிவு-