வவுனியாவில் சிறுஆடைத்தொலைற்சாலை ஆசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைப்பு 

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாட் பதிதீன் அவர்களின் வழிகாட்டலின் பேரில் இளம் யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பைபெற்றுக் கொடுத்தல் வேலைத்திட்டத்திற்கு அமைவாக 6 மாத கால பயிற்சியுடன் சிறு ஆடைத்தொழிற்சாலை வவுனியா மாவட்ட தமிழ் பிரதேசங்களில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உரிய ஆசிரியர்களுக்கான நியமணக்கடிதங்களை அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி மொகைதீன்  வழங்கி வைத்தார்.

வவுனியா மாவட்ட தமிழ் பிரதேச இணைப்பாளர் ஆனந்தன் தலைவமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிறியோன் பாஸ்டர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜோர்ஜ் , நஷார் GS, சேகர் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.