வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வு வவுனியாவில்..!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கு வாக்களித்த, வவுனியா மாவட்ட மக்களுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வு, வவுனியாவில் இன்று  (22) நடைபெற்றது.

குறித்த நிகழ்வில், மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் ஆகியோர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.