வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து புத்தளத்தில் வாகனப் பேரணி..!

கடந்த 33 வருடங்களாக, பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இன்றி காணப்பட்ட புத்தளம் மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தராசுச்  சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அலி சப்ரி ரஹீமுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து, புத்தளத்தில் மாபெரும் வாகனப் பேரணியொன்று இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில், மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரான அலி சப்ரி ரஹீமுக்கு வாக்களித்து, வெற்றிபெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, இன்று மாலை (22) நடைபெற்ற குறித்த வாகனப் பேரணியில், கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.