வாழவைத்தகுளம் பொது விளையாட்டு மைதானத்திற்கான பார்வையாளர் அரங்கத்திற்கு அடிகல் நாட்டு நிகழ்வு.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின்
நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட உள்ள வாழவைத்தகுளம் பொது விளையாட்டு மைதானத்திற்கான பார்வையாளர் அரங்கிற்கான அடிகல் நாட்டும் நிகழ்வு இன்று (27) இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்ற்கு பிரதம அதிதியாக முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுத்தீன் கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அமைச்சரின் பொதுசன மக்கள் தொடர்பு அதிகாரியுமான முத்து முஹம்மட், மீள்குடியேற்ற செயலணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் சியாம், இணைப்பாளர் இம்தியாஸ், பிரதேச சபை உறுப்பினர் ரஹீம், விவாக பதிவாளர் ஜவாஹிர், தொழிலதிபர் ஆப்தின், வேட்பாளர் தாவூத், கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..