விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகளை ஆரம்பித்துவைத்தலும் , 25 விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி தலைமையில் இடம்பெற்றது

திருகோணமலை மாவட்டம் தம்பலகாம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீரா நகர் பொது விளையாட்டு மைதான சுற்றுமதில் நிர்மாணத்திற்கான அடிக்கல் நடும் அங்குரார்ப்பண வைபவம் இடம் பெற்றது

தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர் தாலிப் அலி ஹாஜியாரின் வேண்டுகோளிற்கிணங்க நேற்று (16) திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

கம்பரெலிய வேலைத் திட்டத்தின் கீழ் சுமார் 10 இலட்சம் ரூபா செலவில் மைதானத்துக்கான சுற்றுமதில் நிர்மாண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே அங்குரார்ப்பண வைபவம் இடம் பெற்றதுடன் தம்பலகாம பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய பதிவு செய்யப்பட்டு தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கான உபகரணங்கள் வழங்குவதற்கான அனுமதிப் பத்திரங்களும் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களால் 25 கழகங்களுக்கு  இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.

இக் குறித்த நிகழ்வில் தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர் ஆர்.எம்.றஜீன்,கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் உள்ளிட்ட விளையாட்டு கழகங்களை சேர்ந்த வீரர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.