விழால்ஓடை அனைக்கட்டு மற்றும் மூக்கறையன் பாலம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

எதிர் வரும் 05.10.2019 ஆம் திகதி விவசாயிகளின் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைக்கு தீர்வாக விழால்ஓடை அனைக்கட்டு மற்றும் மூக்கறையன் பாலம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

எனவே அதற்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நீர்பாசன மாவட்ட பொறியியளார் அஸ்ஹர், செங்கலடி பொறியியளார் நிரோஷன், தொழில்நுட்ப உதவியாளர் திலிபன், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஷீட், பிரதேச சபை உறுப்பினர்களான அமீர், ஜெளபர்,தையிப், கிருபைராசா, விவசாய இணைப்பாளர் அக்பர், இணைப்பாளர் றிஸ்மின் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்