வேட்புமனுவை கையளித்தார் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!!!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பில், வன்னியில் போட்டியிடவுள்ள, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அப்துல் ரிஷாட் பதியுதீன், வவுனியா தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இன்று (19) வேட்புமனுவைக் கையளித்தார்.

சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பில் (சமகி ஜன பலவேகய), தொலைபேசி சின்னத்தில், வன்னி மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக அவர் போட்டியிடவுள்ளார்.