ஹோராப்பொல முஸ்லிம் வித்தியாலய நுழைவாயில் மற்றும் பெவில்லியன் திறந்து வைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவரும்  அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹுமானின் ஒத்துழைப்புடன் யுனைடட் விளையாட்டு கழகத்தின் வேண்டுகோளுக்கு அமைய அமைச்சர் றிஷாட் பதியுத்தீனின் நிதி ஒதுக்கீட்டில் கெக்கிராவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஹோராப்பொல முஸ்லிம் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில் மற்றும் பாடசாலை மைதானத்தில் அமைக்கப்பட்ட பெவில்லியன் என்பன பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், பழைய மாணவர்கள் , ஊர்ப்பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்