Breaking
Sat. Apr 20th, 2024

முதன்முறையாக மட்டக்களப்பு-ஓட்டாமாவடியில் நான்கு வழிப்பாதை நிர்மாணிக்கப்படவுள்ளது.விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலியின் முயற்சியினால் நெடுஞ்சாலைகள் அமைச்சு இதற்கென 350 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயவாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் தெரிவித்தார்.

நாலவடிச் சந்தியிலிருந்து தியாவெட்டுவான் பாலம் வiரையான 2 கிலோ மீற்றர் நீளமான பாதை நான்கு வழிப்பாதையாக மாற்றியமைக்கப்பட்டு இடையில் மின்விளக்குகள் பொருத்திப்பட்டு நவீனமயமாக்கப்படவுள்ளன.இதற்கென 300 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது.

அத்துடன் 1 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்ட ஓட்டமாவடி பாலத்திலிருந்து ஓட்டமாவடி பிரதான வீதி 50 மில்லியன் ரூபாய் செலவில் மின்விக்குகள் பொருத்தப்பட்டு நவீன மயமாக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

விரைவில் இவ்அபிவிருத்தப் பணிகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post