Breaking
Fri. Apr 19th, 2024
அதி திறமை வாய்ந்த மாணவர்களை உள்ளடக்கிய கெக்கிராவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கும்புக்வெவ நிமல் சிறி வித்தியாலயம் பல குறைபாடுகள் நிறைந்த பாடசாலையாக காணப்பட்டது.
பிரதானமாக 4,5 ஆம் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் தங்களுக்கென ஓர் வகுப்பறை கட்டிடமில்லாமல் தென்னை ஓலையினால் அமைக்கப்பட்ட ஓர் குடில் போன்ற அமைப்பிலிருந்தே தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
இது தொடர்பில் குறித்த பாடசாலையின் அதிபர் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானிடம் தங்களது பாடசாலைக்கான வகுப்பறை கட்டிட தேவைப்பாட்டை எடுத்துரைத்து கட்டிடமொன்றுக்கான வேண்டுகோளையும் விடுத்திருந்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து குறித்த பாடசாலைக்கு சுமார் 20 லட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்து இரண்டு வகுப்பறைகளை நடாத்த கூடிய வசதிகளமைந்த கட்டிடமொன்ற அமைத்துக்கொடுத்தார்.
இக்கட்டிடம் 2019.02.18 அன்று பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமத்திய மாகாண ஆளுநரின் செயலாளர், கெக்கிராவ பிரதேச சபையின் முதல்வர், மற்றும் பிரதேச அரசியல்வாதிகள், போலிஸ் உத்தியோகத்தர்கள், மற்றும் பாடசாலையின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அங்கு உரையாற்றுகில், இப்பாடசாலையைப்போன்று அனுராதபுர மாவட்டத்தில் பல பகுதிகளிலும் திறமை வாய்ந்த மாணவர்களை உள்ளடக்கிய வளங்கள் பற்றாக்குறையான பாடசாலைகள் காணப்படுகின்றன.
அவற்றுல் பல பாடசாலைகளுக்கு நான் என்னால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றேன். வகுப்பரை கட்டிடங்கள், குடி நீர் வசதிகள், விளையாட்டு மேடைகள், பாதுகாப்பு மதில்கள் என பல வகையிலும் பாடசாலைகளுக்கு உதவி வருகிறேன்.
எனது இச்சேவைகள் இன, மத, கட்சி பேதமின்றி முஸ்லிம், சிங்கள பாடசாலைகளுக்கு சமமாக பகிர்ந்து செய்து கொண்டிருக்கின்றேன் என்பதனையும் இவ்விடத்த்தில் தெளிவு படுத்திக்கொள்கிறேன்.
இது வரைகாலமும் அனுராதபுரத்தை ஆண்ட அரசியல் தலைவர்கள் பொறுப்புணர்ச்சியோடு செயல்பட்டிருந்தால் இன்று இம்மாவட்ட பாடசாலைகள் மற்றும் மத வழி பாட்டுத்தலங்கள் இவ்வாரான பின் தங்கிய தோற்றத்தில் காணப்பட்டிருக்காது. எது எவ்வாராயினும் எனது சேவைகள் அனுராதபுரத்து சகல இன மக்களுக்கும் 100% வீதம் பேத வேறுபாடின்றி கிடைக்கப்பெறும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Related Post