Breaking
Thu. Apr 25th, 2024

சுமார் 200 நாட்களைத் தாண்டி நிற்கும் புத்தளம் குப்பைத் திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தின் இன்னுமோர் மைல் கல்லாக, 05-04-2019 அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற #cleanputtalam, மற்றும் பிரதமருக்கு இடையிலான ( மேல்மாகாண பெருநகர் அபிவிருத்தி அமைச்சு, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உற்பட) சந்திப்பு அமைந்தது.

#cleanputtalam த்தின் தொடர்ச்சியான வேண்டுகோளின் பெயரால், கௌரவ அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் பிரத்தியேகமான ஓர் முயற்சிக்கூடாகவே மேற்படி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என்பதனை வெளிப்படையாக கூறிக்கொள்வதோடு, புத்தளம் மக்கள் சார்பாக எமது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நேற்றைய தினம்,

1. பிரதமரை சந்தித்து எமது போராட்டத்தின் மறைக்கப்பட்ட மக்கள் பக்க நியாயத்தை தெளிவாக விளங்கப்படுத்துவதனூடாக இத்திட்டத்தை நிறுத்த முயற்சித்தல்.
2. குறித்த budget இன் வாக்கெடுப்புக்கு முன்னர், இத்திட்டத்துக்கு ஒதுக்கியிருக்கும் 7600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டை
Budget இலிருந்து நீக்குமாறு ஓர் அழுத்தத்தை (ACMC, SLMC மற்றும் புத்தளப்பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கூடாக) நிர்ப்பந்திப்பதன் மூலம் குறித்த திட்டத்தை கிடப்பில் போடுதல்.

என்ற இரண்டு பிரதான இலக்குகளோடு முன்னெடுக்கப்பட்ட இச்சந்திப்பில்,
துரதிஷ்டவசமாக முதலாவது இலக்கு மாத்திரமே சாத்தியப்பட்டது. எமது கண்முன்னாலேயே குறித்த budget நிபந்தனைகள் இன்றி நிறைவேறியதை பார்த்த வலிகளோடுதான் நாம் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறவேண்டி இருந்தது.

எனினும் முதலாவது இலக்கைப்பொறுத்தவரையில்,
#cleanputtalam, சில திருப்திகரமான அடைவுகளோடு திரும்பியிருக்கிறது.

குறிப்பாக,

1. பிரதமருக்கு இத்திட்டத்திலுள்ள பிரச்சினைகளை நேரடியாக விளங்கப்படுத்தியமை.
2. அமைச்சர் சம்பிக்க ரணவக்க நேரடிப்பதிலின்றி தவிக்குமளவிற்கு எமது வாதங்கள் அமைந்திருந்தமை. ( சில இடங்களில் சபையே சத்தமாய் நகைக்கும் அளவிற்கு அவரது பதில்கள் பலவீனப்பட்டிருந்தமை)
3. எமக்கு ஆதரவாக அங்கிருந்த பல பாராளுமன்ற உறுப்பினர்களும் கருத்துக்கூறியமை
4. விவாதத்தின் போது, அனல்மின் நிலையத்தின் தவறுகளை அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஏற்றுக்கொண்டமை.
5. இப்பிரச்சினை இன்னும் ஆழமாக பேசப்படவேண்டும் என்ற தீர்மானத்திற்கும், இன்னும் இரு வாரங்களுக்குள் அடுத்த சந்திப்பை மேற்கொள்வதற்கும் பிரதமர் இணங்கியமை.
6. எமது சர்வமத தலைமையின் பிரசன்னமும் அவர்களது வார்த்தைகளும் இது பல்லினமக்களின் போராட்டம் என்பதை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தியமை.
7. ” நீங்கள் சொல்வது சரி.. இது எங்கள் தொழில்…. நாங்கள் என்ன செய்ய முடியும் ? அமைச்சர் சொல்வதை செய்கிறோம்” என்று தனிப்பட்ட முறையில், குறித்த project engineer நிகழ்ச்சியின் முடிவில் Dr. பரீனா விடம் ஏற்றுக்கொண்டமை.

என்பவற்றைக் குறிப்பிடலாம்.

இருப்பினும், இருவாரங்களின் பின்னால், இந்த வாக்குறுதிகளின் நிலை எவ்வாறு அமையப்போகிறது என்பதனை வைத்தே நாம் நிரந்தரத் தீர்மானங்களுக்கு வரமுடியுமாக இருக்கும் என்பதனை தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

குறித்த ஏற்ப்பாட்டிற்கும், கூட்டத்தில் பல வகையிலும், புத்தளம் மக்களுக்காக பேசியமைக்காகவும் கௌரவ அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களுக்கும், பிரதியமைச்சர் நிரோசன் பெர்னாண்டோ, பாராளு மன்ற உறுப்பினர் திரு. ரங்க பண்டார அவர்களுக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு,

தனது மிக முக்கிய வேலைகளையும் தள்ளி வைத்து, குறித்த அவசர அழைப்பிற்கு உடனடியாக பதிலளித்த சர்வ மத தலைமைகளுக்கும்.
எமது அழைப்பை ஏற்று உடன் இணைந்த, central environment justice (CEJ) இயக்குனர் திரு. ஹேமந்த விதானகே,
விரிவுரையாளர் திரு. ஜயந்த விஜேசிஙக, கொழுப்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் Dr. பரீனா ருஸைக் ஆகியோருக்கும், எமது விஷேட நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

குறித்த தினம் கடுமையான சுகவீனத்துக்கு மத்தியிலும் பயணிக்க முடிவு செய்த மதிப்பிற்குரிய முபாரக் sir அவர்களுக்கும் அல்லாஹ்வின் அருளைப்பிரார்த்திக்கின்றோம்.

Related Post