Breaking
Fri. Apr 26th, 2024

 

அமைச்சர் ரிசாத் பதியுதீன் வவுனியா பாரதிபுரத்தில் வசிக்கும் தமிழ் மக்களை வெளியேறுமாறு நேற்று (28) மிரட்டல் விடுத்தார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ள கருத்தானது, இனவாதமே அன்றி வேறொன்றுமில்லை. ஓற்றுமையாக வாழும் தமிழ் முஸ்லிம் மக்களிடையே தயவு செய்து இனவாத்தை தூண்டி அரசியல் பிழைப்பு நடத்த வேண்டாம் என வவுனியா மாவட்ட இன நல்லுறவிற்கான ஒன்றியத்தின் தலைவர் அப்துல் பாரி கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இக் கண்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளதாவது:-

அமைச்சர் ரிசாத் பதியுதீன் தமிழ் முஸ்லிம் என்ற இன வேறுபாடின்றி அனைவருக்கும் சேவை செய்து வருகின்றார். இதனை சகித்துக் கொள்ள முடியாத சிவசக்தி ஆனந்தன் உட்ப சில தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களை இனவாதியாக காட்டி அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொள்கின்றனர். அமைச்சர் ரிசாத் பதியுதீனை தமிழ் மக்களின் எதிரியாக காட்டுவதன் மூலம் தங்களின் பாராளுமன்ற கதிரையை பாதுகாக்க முனைகின்றார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இவர்களால் கிடைத்த நன்மைகள் தான் என்ன? இர்களால் ஒரு குடிசையைக் கூட கட்டடிக் கொடுக்க முடிந்ததா? அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீள் குடியேற்ற அமைச்சராக இருந்த போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மூன்று இலட்சம் தமிழ் மக்களை சொந்த இடங்களுக்கு மீள் குடியேற்றம் செய்ததுடன் அம் மக்களுக்கு தேவையான அத்தியவசிய உதவிகளையும் உடனுக்குடன் வழங்கியிருந்ததை பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள். அமைச்சர் நினைத்திருந்தால் தான் மீள் குடியேற்ற அமைச்சராக இருந்த போது தனது அதிகார வளத்தை பயன்படுத்தி முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்து அவர்களுக்கு மேலதிக உதவிகளையும் செய்திருக்கலாம் ஆனால் அவர் அப்படி பக்கசார்பாக நடந்து கொள்ளவில்லை.

இன்று மீள் குடியேறியுள்ள தமிழ் மக்கள் வறுமை உட்பட பல துன்பங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். தமது வாழ்வாதாரத்துக்கு தமிழ் தலைவர்கள் உதவி செய்வார்கள் என தமிழ் மக்கள் தமிழ் தேசிய வாதிகளுக்கு வாக்களித்தனர். ஆனால் இம் மக்கள் இதுவரை எவ்வித நலனையும் பெறவில்லை. அறிக்கை அரசியலை இனியும் நம்பத்தயாரில்லாத தமிழ் மக்கள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மேல் நம்பிக்கை வைத்து அவரிடம் உதவி கோரி விண்ணப்பிப்பதையும் சங்கங்களாகவும் குழுக்களாகவும் நேரடியாக அமைச்சுக்கு வந்து சந்தித்து உதவி நலத் திட்டங்கள் தொடர்பில் கோரிக்கை விடுப்பதானது சிவசக்தி ஆனந்தன் உட்பட அதிகமான தமிழ் தேசிய வாதிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தயுள்ளது.

இதனை முடிறியடிப்பதற்காக இவர்கள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தமிழர்களின் பூர்வீக காணிகளை பிடிக்கின்றார், பாதுகாப்பு படையினரையும் அடாவடிகளையும் வைத்துக்கொண்டு தமிழர்களை அச்சுறுத்துகின்றார் என இவர்கள் அறிக்கை விட்டு அரசியல் நடத்துகின்றார்.

தற்போது மீள் குடியேறியுள்ள வடக்கு முஸ்லிம்கள் பல தேவைகளை சுமந்து கொண்டிருக்கின்றார்கள். இதனை நிபர்த்தி செய்வதற்காக வெளிநாட்டு தனவந்தர்கள் மற்றும் பிரதிநிதிகளை அழைத்து முஸ்லிம்களின் உண்மை நிலவலங்களை தெளிவு படுத்தி அவர்களிடமிருந்து வடக்கு முஸ்லிம்களுக்கு உதவிகளைப் பெற்றுக் கொடுக்கின்றார். இதில் ஒரு அங்கமாக பாகிஸ்தான் பிரதிநிதிகளுடன் அமைச்சர் வவுனியாவிற்கு வந்தார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், பாரதிபுர மக்களை அமைச்சர் ரிசாத் மிரட்டியதாக அறிக்கை விட்டுத்துள்ளார்.

இவர்கள் விடும் அறிக்கைகள் சரியானதா ஒருபக்கம் சார்ந்ததா என பாராமல் சில தமிழ் இணையத்தளங்கள் செய்திகளை பிரசுரம் செய்தமையானது எமக்கு வேதனையளிக்கின்றது. ஊடகங்களுக்கு சமுகம் தொடர்பில் பாரிய பொறுப்பு உள்ளது. ஊடகங்கள் பக்கம் சார்ந்து செய்தி வெளியிடுவதானது சமுகத்தை மேலும் பிளவு படுத்தும் செயலாகும்.

அமைச்சர் ரிசாத் பதியுதீன் வவுனியா பாரதி புர மக்களை வெளியேறுமாறு மிரட்டல் விடுத்தார் என சில இணையத்தங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சரை தொடர்பு கொண்டு இவ் இணையத்தளங்கள் கருத்துக் கேட்காமல் அமைச்சர் ரிசாத் பதியுதீனை மோசமானவராக காட்ட முனைவது முஸ்லிம்களை மேலும் கவலை கொள்ளச் செய்துள்ளது என இவர் தனது கண்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *