Breaking
Wed. Apr 24th, 2024

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் இளம் கண்டு பிடிப்பாளரான எம்.எம்.யூனூஸ்கானை கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி இன்று (செவ்வாய்க்கிழமை) தனது அமைச்சில் சந்தித்து அவரது முயற்சிக்காக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இளம் கண்டு பிடிப்பாளரான எம்.எம்.யூனூஸ்கான் நெல் விதைக்கும், உரம், எண்ணெய் விசுறும் செயற்பாடுகளைக் கொண்ட இயந்திரமொன்றினை உருவாக்கி இளம் கண்டுபிடிப்பாளர் என்ற சாதனை புரிந்துள்ளார்.

குறித்த இயந்திரம் மூலம் மேற்கூறிய செயற்பாடுகளைத் திறம்பட மேற்கொள்வதோடு, தன்னியக்க கருவியூடாக வயல் வரப்புகளிலிருந்து கொண்டே சிரமமின்றியும் இயக்கும் திறனைக் கொண்டமைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.

இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவினால் நாடலாவிய ரீதியில் நடாத்தப்பட்ட இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் வெற்றி பெற்ற இருபத்தியொரு மாணவர்களுள் முதல் கட்டமாக கொரியா செல்லும் பன்னிரண்டு மாணவர்களுள் எம்.எம்.யூனூஸ்கான்; தென் கொரியாவில் ஒரு வாரம் நடைபெறவுள்ள சர்வதேச கண்காட்சியில் தனது கண்டுபிடிப்பினை காட்சிப்படுத்தும் வாய்ப்பினைப் பெற்று இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை தென் கொரியா நாட்டுக்கு பயணமாகவுள்ளார்.

இந்த சர்வதேசக் கண்காட்சியில் பங்கு பற்றி மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், கல்குடா பிரதேசத்திற்கும் தனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ள குறித்த மாணவனுக்கு பிரதி அமைச்சர் வாழ்த்துக் தெரிவித்ததுடன் எதிர் காலத்தில் இத்துறையில் மாணவனது முயற்சிக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வதாகவும் மாணவனிடம் உறுதியளித்தார்.

இச் சந்திப்பில் பிரதி அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் எஸ்.எம்.தௌபீக்கும் கலந்து கொண்டார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *