Breaking
Thu. Apr 25th, 2024

முதலாவது சொர்க்கம் – ஜன்னத்துல் பிர்தௌஸ்

1) போதும் என்ற மனம் கொண்டவர்கள்.
2) தினமும் பாவமன்னிப்பு (தவ்பா) தேடுபவர்கள்.
3) நல்லவர்களுடன் சேர்ந்து இருப்பவர்கள்.
4) பொறாமையை விட்டு நீங்கிக் கொள்பவர்கள்.

இரண்டாவது சொர்க்கம் – தாருஸ் ஸலாம்

1) அனாதைகளை ஆதரிப்பவர்கள்.
2) விதவைகளுக்கு ஆதரவு அளிப்பவர்கள்.
3) ஸலாம் சொல்பவர்கள்.
4) முஸ்லிமின் தேவை அறிந்து உதவி செய்பவர்கள்.

மூன்றாவது சொர்க்கம் – ஜன்னத் அத்னு

1) பேச்சை குறைப்பவர்கள்.
2) தூக்கத்தை குறைத்து இறை வணக்கத்தில் ஈடுபடுபவர்கள்.
3) உணவை குறைவாக உண்பவர்கள்.
4) மக்களின் தொடர்புகளை குறைத்து(இறை வணக்கம் செய்பவர்கள்.

நான்காவது சொர்க்கம் – ஜன்னத்துல் நயிம்

1) தானம் தர்மம் செயபவர்கள்.
2) நன்றி செலுத்துபவர்க.
3) சந்தேகம் இல்லாமல் இருப்பவர்கள்.
4) நற்குணம் உடையவர்கள்.

ஐந்தாவது சொர்க்கம் – தாருல் குல்து

1) திட்டாமல் (ஏசாமல்) இருப்பவர்கள்.
2) அடுத்தவர்களை கேவலப்படுத்தாதவர்கள்.
3) யாருக்கும் அநீதி செய்யாதவர்கள்.
4) எப்பொழுதும் கலிமாவில் நிலைத்து இருப்பவர்கள்.

ஆறாவது சொர்க்கம் – தாருல் ரைய்யான்

1) பள்ளிவாசலை கட்டுபவர்கள்.
2) தொழுகையைக் கொண்டு பள்ளிவாசலை நிரப்புபவர்கள்.
3) துஆ மற்றும் இஸ்திஃபாரில் ஈடுபடுபவர்கள்.
4) மார்க்கக் கல்வியை வழங்குபவர்கள்.

ஏழாவது சொர்க்கம் – மக்ஆது சித்தீகீன்

1) நோயாளிகளை நலம் விசாரிப்பவர்கள்.
2) ஜனாஸாவை பின் தொடர்ந்து செல்பவர்கள்.
3) கபனுக்கு தேவையான துணி மற்றும் பொருட்கள் வாங்குபவர்கள்.
4) வாங்கிய கடனை உரிய காலத்தில் அழகியமுறையில் திருப்பி செலுத்துபவர்கள்.

எட்டாவது சொர்க்கம் – ஜன்னத்துல் மஃவா

1) விருந்தாளிகளை உபசரிப்பவர்கள்.
2) பெற்றோர்களை சங்கை படுத்துபவர்கள்.
3) அண்டை வீட்டாருடன் சங்கையாக இருப்பவர்கள்.
4) ஆலிம் மற்றும் அறிஞர்களை கண்ணியப்படுத்து பவர்கள்.

யா அல்லாஹ் எங்களையும், எங்கள் பெற்றோர்களையும், எங்கள் சந்ததிகளையும், சொந்த பந்தங்களையும், மூஃமினான அனைவர்களுக்கும் இந்த அருள் மிக்க பாக்கியத்தை தந்தருள்வாயாக!
ஆமீன்! ஆமீன்!! ஆமீன்!!! யா ரப்புல் ஆலமீன்

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *