Breaking
Tue. Apr 23rd, 2024

தமிழ் மக்களோடு முஸ்லிம் சிங்கள மக்களுக்கும் சிறந்த தீர்வு கிடைக்க முயற்சிகள் மேற்கொண்டு அத் தீர்வு கிடைக்குமாயின் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாக வர்த்தக கைத்தொழில் அமைச்சர்

ரிசாட் பதியுர்தீன் தெரிவித்தார்.

செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

‘வட மாகாணத்திலே வாழ்கின்ற தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றோம். இவ்வாறு வாழ்கின்ற சூழலை குழப்புவதற்காக அல்லது எங்களுக்கிடையில் சில விடயங்கள் திணிக்கப்படுகின்ற போது அதை எவ்வாறு நாம் தடுக்கப் போகின்றோம்.

தமிழ் தரப்பு மாத்திரம் தடுத்து அதில் வெற்றி பெறமுடியுமா?, அல்லது சிறுபான்மையாக இருக்கின்ற இஸ்லாமியர்களையும் நியாயமாக சிந்திக்கின்ற பரம்பரையாக வாழ்கின்ற சிங்கள சகோதரர்களையும் இணைத்துக்கொண்டு நியாயத்திற்காக போராடப் போகின்றோமா?

காணி விடயங்களை கையாளுகின்ற போது சிங்கள உறுப்பினர்களையும் முஸ்லிம் உறுப்பினர்களையும் கைகோர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு போகின்ற போது அது இனவாத சிந்தனையுடன் பார்க்கப்பட முடியாது. இன்று இந்த பிரதேசத்தில் வாழும் விவசாயிகளுக்கு விவசாய நிலம் இல்லை. விவசாயத்தை பரம்பரையாக செய்த நிலத்தை பறித்தெடுத்து இதை நீங்கள் செய்யுங்கள் என கூறுவது இந்த பிரதேசத்து மக்களின் வாழ்வை மிகவும் அசிங்கப்படுத்தும் அல்லது இன்னும் துன்பப்படுத்தும் என நாங்கள் எல்லோரும் சேர்ந்து பேசுகின்ற போது நாங்கள் நியாயமான தீர்வை நோக்கி பயணிக்கலாம்.

அதைவிட பலவிதமான குற்றச்சாட்டுக்கள் அண்மைக்காலமாக என்மீது சுமத்தப்படுகின்றது. அதாவது முஸ்லிம்களை கொண்டு வந்து குடியேற்றுகின்றேன். முஸ்லிம் மக்களுக்கு காணிகளை எடுத்துக் கொடுக்கின்றேன். முஸ்லிம் மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்கின்றார் என்ற குற்றச்சாட்டுக்கள் என்மீது உள்ளது. அதில் உள்ள பலவற்றை சில ஊடகவியலாளாகள்தான் மிக அதிகமாக எழுதுவார்கள் என நினைக்கின்றோன்.

எதார்த்தத்தை எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டும். 23 வருடங்களுக்கு முன் வெளியேற்றப்பட்ட  முஸ்லிம்கள் முன்பு 200 ஆக சென்றவர்கள் 400 ஆக வருகின்றார்கள். அல்லது அவாகள் இருந்த கிராமங்களில் புதிய கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை நாம் தடுக்க முடியாது. அன்றைய சூழல் அன்றைய எதார்த்தம் அவ்வாறு அமைந்தது.

முல்லைத்தீவிலே 10 கிராமத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் இன்று அங்கு போய் பார்க்கின்றபோது முஸ்லிம் மக்கள் வாழக்கூடிய இடம் அங்கு இல்லை. ஏனெனில் ஏனைய பிரதேசத்தில் இருந்து அச்சத்தினால் வந்த தமிழ் சகோதரர்கள் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

சிலருக்கு பெமிட் வழங்கி வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஒரேயொரு முஸ்லீம் பாடசாலை முல்லைத்தீவில் இருந்தது. அந்தப் பாடசாலையின் மைதானத்தில் கூட வீடுகளை கட்டி தமிழ் சகோதரர்கள் வாழ்கின்றார்கள். நான் அங்கு சென்றபோது முஸ்லிம் மக்கள் சொன்னார்கள் இவாகளை அகற்றவேண்டும் என்று. ஆனால் அப்படி செய்ய முடியாது என்று சொன்னேன். பல வருடங்களாக அவாகள் வாழ்கின்றார்கள். ஆகவே அவர்களுக்கு வேறெங்காவது வீடுகளை கட்டிக்கொடுத்து அவர்கள் அங்கு சென்று குடியேறிய பின்னர்தான நீங்கள் இந்த காணிகளை கேட்க வேண்டும் என்று நான் அவர்களை அமைதிப்படுத்தினேன்.

எவ்வாறு 3 லட்சம் தமிழ் மக்கள் இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்களோ எவ்வாளவு துன்பங்களை தியாகங்களை இந்த வாழ்க்கையில் அனுபவித்தார்களோ அதேபோல் இடம்பெயர்ந்து 22 வருடங்களாக வேறு இடங்களில் வாழும் முஸ்லிம் மக்களும் அத்தனை துன்பங்களையும் அனுபவித்துள்ளார்கள்.

இந் நிலையிலே இந் நாட்டில் பிரச்சனை தீரவேண்டும் என பலரும் பேசினாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வnhரு விதமான கருத்து இருக்கின்றது. இதில் 5 வீதமானவர்கள் இந்த பிரச்சனை தீர்க்கப்படக்கூடாது என்ற சிந்தனையில் இருந்தாலும் 95 வீதமானவர்கள் பிரச்சனைக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் உள்ளார்கள்.

ஆகவே இந்த தீர்விலே நாம் எல்லோரும் சகோதரர்கள் என்று தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களை இணைத்துக்கொண்டு போராடினால்  ஆண்டுக்கணக்கில் செலவழிக்க வேண்டியதை ஒரு மாதத்தில் அடைந்து கொள்ள முடியும் என்ற உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் போராட்டத்தை நாம் மதிக்கின்றோம். அவர்களுடைய தியாகத்தை மதிக்கின்றோம். அன்று இழந்த அத்தனை உயிர்களும் மண்ணுக்காக நியாயத்திற்காக பலிகொடுத்தார்கள். அன்று சில பேரினவாத சக்திகள் அநியாயம் செய்தது. அதனை இல்லை என்று சொல்ல முடியாது.

இன்றும் சில பேரினவாதிகள் இந்த நாட்டில் முளையெடுத்து சிங்க முஸ்லிம் மக்களை குழப்புகின்றார்கள். கத்தோலிக்க சிங்கள மக்களை குழப்புகின்றார்கள். அவர்கள் பாம்பு போல் படம் எடுத்து ஆடுகின்றார்கள். நாம் தைரியமாக பேசுகின்றோம். அது தமிழ் இனவாதமாக இருக்கட்டும் முஸ்லிம் இனவாதமாக இருக்கட்டும் சிங்கள இனவாதமாக இருக்கட்டும் நாங்கள் பேசுகின்றோம்.

இந்த நாட்டிலே எந்த பிரச்சனையாக இருந்தாலும் எல்லா பத்திரிகையிலும் விமர்சிக்கப்படுபவனாக நான் உள்ளேன். அதற்காக நான் அச்சப்படுவதில்லை. இன்னும் 100 மடங்கு எனக்கு எதிராக எழுதினாலும் நான் பயப்படபோவதில்லை. என்னிடம் மனச்சாட்சி இருக்கின்றது. இந்த மண்ணில் வாழும் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கப்படவேண்டும். அதேபோல் தமிழ் பேசும் இன்னொரு இனமான முஸ்லிம் இனமும் அந்த தீர்வில் நிம்மதியாக சந்தோசமாக வாழவேண்டும்.

அதேபோல் இந்த மண்ணிலே வாழும் தர்மபால, ஜயதிலக போன்ற பரம்பரை சிங்கள மக்களும் நியாயமாக சந்தோசமாக வாழவேண்டும். அவ்வாறான தீர்வுக்கு வருவீர்களாக இருந்தால் அந்த தீர்வுக்கு என்னுடைய அமைச்சு தடையாக இருக்குமானால் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கின்றேன்.

அகதிமுகாமில் அகதியாக இருந்த நான்தான் சோத்துக்காக சோத்துக்கோப்பை ஏந்தி வரிசையில் நின்ற நான்தான் படிக்க வசதியில்லாமல் பல மைல் தூரம் நடந்துபோய் படித்து எனது இலட்சியமான எஞ்சினியராக வரவேண்டும் என்ற இலக்கை அகதி முகாமில் இருந்து கஸ்டத்திற்கும் கஸ்டமான நிலையில்  அடைந்து இன்று அமைச்சராக வந்த நான்தான் மெனிக்பாம் மக்கள் வந்தபோது அந்த மக்களின் படிப்பையும், அவர்களுக்கு தேவையான அத்தனை விடயங்களையும் நேர்மையாக செய்தேன். எனவே நான் எனது மனச்சாட்சிக்கு மதிப்பளித்து நடக்கின்றேன்’ என தெரிவித்தார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *