Breaking
Wed. Apr 24th, 2024

மன்னார் மாவட்டத்தில் அபிவிருத்தி தொடர்பாக காணி விடுவிப்பு செய்வது பற்றி ஆராயும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவினர் மீண்டும் எதிர்வரும் இம்மாதம் 9 ஆம்,10 ஆம் திகதிகளில் முசலி,மாந்தை மேற்கு,மடு ஆகிய பிரதேச செயலகப் பிரதேச செயலகங்களுக்கு வருகைத்தரவுள்ளனர்.

ஜனாதிபதியினை ஜூலை மாதம்  சந்தித்த அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் சிவில் அமைப்புக்களின் ஒன்றிய பிரதி நிதிகளினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் முசலி பிரதேச மக்கள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மேற்படி குழு அமைக்கப்பட்டது.இக்குழுவினர் கடந்த மாதம் அப்பகுதிக்கு விஜயம் செய்து மக்கள் கருத்துக்களை அறிந்ததாகவும்,இது தொடர்பிலான அறிக்கையினை கடந்த மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதியிடம் இக்குழுவினர் சமர்பிக்க இருந்த போது அப்பிரதேச மக்கள் அமைச்சர் றிசாத் பதீயுதீனை தொடர்பு கொண்டு தங்களது கருத்துக்களை முழுமையாக தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும்,பிரிதொரு தினத்தை தங்களுக்கு பெற்றுத்தருமாறும் வேண்டியிருந்தனர்.

இதற்கமைய அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரடியாக சந்தித்து மக்களின் இந்த கோறிக்கையினை முன் வைத்ததுடன்,எழுத்து மூலமான வேண்டுகோளினையும் சமர்ப்பித்திருந்தார்.இந்த வேண்டுகோளை ஜனாதிபதி ஏற்றுள்ளதாகவும் இம்மாதம் 21 ஆம் திகதி வரை அந்த காலத்தினை நீடிப்பு செய்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர்ஒஸ்டின் பெர்ணான்டோ அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களுக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் பிரதேச செயலாளர்கள்,கிராம அதிகாரிகள்,சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள்,மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர்,அமைப்புக்களின் பிரதி நிதிகள் ஆகியோர் இந்த விடயத்தை கவனத்தில் எடுத்து இந்த மக்களின் நியாயமான கோறிக்கைகளை வருகைத்தரவுள்ள மேற்படி குழுவிடம் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கேட்டுள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *