Breaking
Fri. Apr 19th, 2024

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இனங்காணப்பட்டவர்களுக்கான பல்வேறு உதவிகளாக பல சமூக உதவிகள் தென்ஆபிரிக்காவில் இயங்கும் அல் இமாட் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வு கிண்ணியா அல் அதான் பாடசாலையில் இன்று (10) ஞாயிற்றுக் கிழமை அல் ஹிக்மா பவுண்டேசனின் தலைவர் அஷ்ஷெய்க் மொஹமட் அப்பாஸ் இபாதுள்ளா தலைமையில் இடம் பெற்றது.

தென் ஆபிரிக்காவை தலைமையகமாக கொண்டு இயங்கும் அல் இமாட் அமைப்பின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிண்ணியா அல் ஹிக்மா அமைப்பினால் அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டன.

வீடமைப்புத் திட்டம், சக்கரநாற்காலி, உலர் உணவுப் பொதிகள், கற்றல் உபகரணங்கள் என்பனவே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன .

விசேட தேவையுடையவர்கள், தாய் தந்தையை இழந்த பாடசாலை மாணவர்கள், கற்றலில் அதிக ஈடுபடுடைய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் போன்ற தெரிவு செய்யப்பட்டவர்களுக்கே இவ்வாறான உதவிகள் வழங்கப்பட்டன.

கற்றல் உபகரணங்கள் 50 அதிகம் , ரூபா பத்து இலட்சம் பெறுமதியான 20 வீடுகள்,உலர் உணவுப் பொதிகள் 20 க்கும் அதிகம்  , சக்கர நாற்காலிகள் 20 க்கும் அதிகம் என்பன வழங்கப்பட்டன

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட தென்ஆபிரிக்க மற்றும் லண்டன் நாட்டை சேர்ந்த நன்கொடையாளர்களுக்கான நினைவுச் சின்னமும் பொன்னாடை போர்த்தி கௌரவிப்புச் செய்யும் நிகழ்வும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களால் நடை பெற்றன.

பிரதியமைச்சருக்கான நினைவுச் சின்னமும் பொன்னாடையும் போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வினை அல் ஹிக்மா பௌன்டேசனின் தலைவர் மொஹமட் அப்பாஸ் இபாதுள்ளா அவர்களால் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப், அல் இமாட் அமைப்பின் ஸ்தாபகர் அஷ்ஷெய்க் யாகூப் வாஹிட், தென் ஆபிரிக்காவை சேர்ந்த ஹாரி ஸியாட் பெடல், மௌலானா அஹமட் சொசான் , லண்டனை சேர்ந்த ஹாபிஸ் டாக்டர் அப்துல் சமட் முல்லா மற்றும் கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம், கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கபில காலகே, கிண்ணியா பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர்களான எம்.எஸ்.ஹபீபுள்ளா, எப்.எம்.பௌமி , அல் அதான் பாடசாலை அதிபர் எம்.எஸ்.அப்துல் அஸீஸ் , பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

Related Post