Breaking
Thu. Apr 25th, 2024

குச்சவெளி பிரதேச செயலகத்திட்குட்பட்ட பிரதேச அபிவிருத்தி தொடர்பான மீளாய்வும் 2019 ம் ஆண்டுக்கான நடை முறைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (12) செவ்வாய்க் கிழமை குச்சவெளி பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் தனேஸ்வரன் தலைமையில் நடை பெற்றது.

குறித்த கலந்துரையாடலானது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் பங்கேற்புடன் இடம் பெற்ற இக் கலந்துரையாடலில் பல்வேறு திட்டங்கள் 2019 ம் ஆண்டு நடை முறைப் படுத்தப்படவுள்ள திட்டங்கள் முன்னைய மதிப்பீட்டு நடவடிக்கைகள் என்பனவும் இடம் பெற்றன . அபிவிருத்திக்காக ஒதுக்கப்படுகின்ற நிதிகள் உரியவாறு உரிய காலப்பகுதிக்குள் திட்டங்களை நடை முறைப்படுத்துமாறு பிரதியமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

நீர்ப்பாசன நடவடிக்கைகள் தொடர்பான மீளாய்வும் இதன் போது மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் ஏ.எல்.ஜௌபர் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது. காலதாமதமின்றி செயற்திட்டங்களை பயனுள்ள வகையில் முன்னெடுக்குமாறும் அபிவிருத்திக்கு தடைகளாக இருக்கும் விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுப்பதாகவும் பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் மேலும் இதன் போது தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் பிரதேச உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகள் என பலர் பங்கேற்றார்கள்.

Related Post