Breaking
Wed. Apr 17th, 2024

இன்று முஸ்லிம் மக்களுக்கு எதிராக எவ்வளவோ பிரச்சனைகள் வந்தும் முஸ்லிம் தலைமைத்துவங்களும் அரசியல்வாதிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் மௌனம் சாதிப்பதுஏன்? என்றுகேள்வி எழுப்பினார் வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்.

சமகால அரசியல் நிகழ்வுகள் தொடர்பானமுக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று முசலியில் இடம் பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்!

ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் போல் நானில்லை.ஊடகங்களில் படம் காட்டவும் பொய்யான பிரதேசவாதம் கூறி வாக்களித்த மக்களை ஏமாற்றவும் எம் தலைவர் எமக்கு  கற்றுதரவில்லை. குருடர் முன் பிச்சைகேட்டு செவிடர் காதில் சங்கு ஊதுகின்றஅரசியல் என்னிடம் இல்லை.

வாக்களித்த மக்களை ஏமாற்றிவன் முறை அரசியல் செய்யும் வழி முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்க்கு கிடையாது.உயிர் தந்த தகப்பனை போல் தனக்கென பாராளுமன்ற உறுப்பினரை வன்னியில் உருவாக்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான கௌரவ றிசாட் பதியுதீன் அவர்களுக்கும் வாக்களித்த மக்களையும் ஏமாற்றி பிழைப்பு நடத்தும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் தன்னைத் தானேபுகழ்ந்து கொண்டு வந்த பாதையை மறந்துஅரசியல் செய்து வருகின்றார்.

இப்படியான அரசியல்வாதிகள் போல் நானில்லை! தலைமைத்துவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நாங்கள் எங்கள் சேவையைத் தொடர்வோம். தன்னைத் தானே புகழ்ந்து திரியும் அரசியல்வாதிகள் போல் நாங்கள் இல்லை எனவும் றிப்கான் பதியுதீன் கூறினார்.

இன்று என்னையும் ஒருவடமாகாண சபை உறுப்பினராக்கிய அனைத்து மக்களுக்கும் எனதுபதவிக் காலத்துள் செய்யக் கூடியசேவைகளை இன இமத இபேதமின்றி செய்வேன். செய்துவருகின்றேன்.

நான் அரசியலில் புதியவராக இருந்தலும் என்னுடையதேசியத்தலைவர் கௌரவ அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் பாசறையின் கீழ் வளர்ந்தவன். அவரின் மக்களுக்கான சேவையிலும் செயற்பாடுகளிலும் நானும் பங்காளியாக இருப்பேன். என்னால் முடிந்ததை செய்வேன்.

இன்று வடமாகாணத்தில் முல்லைத்தீவு முசலி இமறிச்சுக்கட்டி கரடிக்குழி சன்னார் போன்ற இடங்களில் முஸ்லிம்கள் படுகின்ற இன்னல்கள் பிரச்சனைகள் ஏராளம் தங்கள் சொந்த மண்ணிலே குடியேற முடியாத துன்பங்கள் அத்தனை விடயத்தையும் தனி ஒருமனிதனாக செயற்பட்டு பிரச்சனைகளுக்குமுகம் கொடுக்கின்ற ஒருஅமைச்சராக பாராளுமன்ற உறுப்பினராக கௌரவ அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்கள் இனவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இதனை இதர முஸ்லிம் தலைமைத்துவங்கள் அரசியல்வாதிகள் இபாராளுமன்றஉறுப்பினர்கள் குருடர் முன் பிச்சைகேட்டுசெவிடர் காதில் சங்கு துவதுபோல் நாடகமாடுவது ஏன்?

மேலும் இன்று நானும் ஒரு அரசியல்வாதியாக தெரிவு செய்யப்பட்டு ஒன்றரை வருடங்களாகிவிட்டது. என்னால் முடிந்தவரை இந்தமண்ணிற்காகவும் மக்களிற்காகவும் எந்தவிதபாகுபாடுமின்றிசேவையாற்றிவருகின்றேன்.
என் மண்ணில் உள்ளமக்களுக்காகவும் நான் குரல் கொடுக்கதயாராகஉள்ளேன். சுயநலமற்றஅரசியல்வாதியாகவேநான் இருக்கவிரும்புகிறேன். மக்களாலும் இறைவனாலும் தந்தபதவியை மக்களுக்காகவும் இசமூகத்திற்காகவும் மக்களோடு மக்களாக எவ்வேளையிலும் இருந்து சேவைசெய்வேன். என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *