Breaking
Wed. Apr 24th, 2024

மன்னார் பிரதேச சபையின் 12வது அமர்வின் போது முசலி பிரதேசபைக்குட்பட்ட சிலாவத்துரையில் கடற்படையினரால் ஆக்கிரமிப்புக்குள்ளான காணியை விடுவித்து மக்களின் பாவனைக்கு கையளிக்கும் தீர்மானம் தவிசாளர் முஜாஹிர் அவர்களினால் கொண்டுவரப்பட்டு உறுப்பினர்களின் முடிவுக்காக சமர்ப்பிக்கப்பட்டது.

தவிசாளரினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை 21சபை உறுப்பினர்களும் ஏகமனதாக அங்கிகரித்ததுடன்  உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமர்வின் போது கலந்துரையாடப்பட்டது.

மேலும் இன மதத்துக்கு அப்பால் 21 நாட்களாக முசலி பிரதேசத்தில் இந்த போராட்டம் நடைபெற்றுவருகின்றது. இந்த முசலி பிரதேசத்தில் 32 கிராமங்களுக்கும் தலைநகராக சிலாவத்துறை நகர் காணப்படுகிறது, இந்த நகரில் அமைந்துள்ள  கடற்படை முகம் அகற்றப்படவேண்டிய தேவைப்பாடு உள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் முகமாக இந்த போராட்டம் நடைபெற்றுவருகின்றது. இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளும் மக்களுக்கு எமது பிரதேச மக்கள் சார்பாக மன்னார் பிரதேசபை முழுமையான ஆதரவினை வழங்குவதாக முடிவுகள் எடுக்கப்பட்டது….

Related Post